1150 x 80 px
மகாராஜாவின் முயற்சி வெற்றியளிக்குமா?

மத்திய வங்கியில் நடந்த பிணை முறி மோசடி குறிதது பெர்ப்பச்சுவல் டிரெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியேஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் கைதுசெய்யப்பட்டமை அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் கைதுசெய்யப்படும் வரை ஒரு முக்கிய நபர் இதன் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் அல்ல. குறித்த இருவரும் கைதுசெய்யப்படும் போது குறித்த நபர் அந்த இடத்தில் இருக்கவும் இல்லை. எனினும், அருகில் இருந்த இடமொன்றில் இருந்து குறித்த நபர் இதற்கான இணைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இவர் மறைவாக இருந்து இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்திருந்தாலும் ஒரு கெமராவில் சிக்கியுள்ளார்.

அன்றைய தினம் மிகவும் பரப்பாக காணப்பட்ட அந்த நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரியென நினைத்திருந்தோம். இருந்தாலும் சி.ஐ.டி. அதிகாரி அல்ல. அவர் மகாராஜா நிறுவனத்தின் உரிமையாளர் கிளி மகாராஜா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம். அன்றைய தினம் அருகில் இருந்த வீதியில் இருந்து இணைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போதும் இறுதிவரை பரபரப்புடன் செயற்பட்ட இவர், ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்குவதற்கு கடுமையான முயற்சிகளை முன்னெடுத்திருந்தார். பிரதமர் பதவியில் மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்தும் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு தமது ஊடக வலையமைப்பின் மூலம் கடுமையான பிரசாரத்தை வழங்கியிருந்தார்.

எனினும், தற்போது நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்ற பழமொழியே இதன்போது ஞாபகம் வருகிறது. கிளி மகாராஜா மீண்டும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

இதற்காக ரணில் விக்ரமசிங்கவின் மூத்த சகோதரருடன், கிளி மகாராஜா அண்மையில் சந்திப்பொன்றையும் நடத்தியிருந்தார்.

எனினும், ரணில் விக்ரமசிங்கவுடன் இணைவதைவிட அவர் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவை விமர்சித்ததைப் போல வெளியே இருந்துகொண்டு விமர்ச்சிக்கட்டும் என ரணில் விகரமசிங்கவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிளி மகாராஜா மீண்டும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைய மேற்கொள்ளும் முயற்சியை ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமானவர்கள் வெறுக்கின்றனர்.

killi tnl 02

killi tnl 01

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top