1150 x 80 px
பாதுகாப்புச் சபையின் பிரதானி பதவி விலகுவாரா?

கப்பம் பெறுவதற்காக 11 பேரை கடத்திச் சென்று காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி லெப்டினன் காமண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு எதிராக பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் கடற்படையினரின் உதவியுடன் நாட்டைவிட்டு தப்பிச் சென்றமை குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சான் அபேசேகர தகவல் வெளியிட்டுள்ளார்.

அரச நிர்வாக அமைச்சில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனரத்ன, சிறைச்சாலைகள் மறுசீரமப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, பாதுகாப்புச் சபை பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தன, கடற்படைத் தளபதி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சீ. வெலியமுன உள்ளிட்டோர் கடந்த 20ஆம் திகதி விசேட சந்திப்பொன்றை நடத்தினர். இதன்போதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சான் அபேசேகர மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

கடற்படைக்குச் சொந்தமான அதிவேக தாக்குதல் படகின் மூலம் லெப்டினன் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி, இலங்கையில் இருந்து கடல் வழியாக இலங்கைக் கடலைக் கடக்கச் செய்த விதம் குறித்து இதன்போது அவர் தகவல் வெளியிட்டுள்ளார். திர விஜேகுணவர்தன

ஹெட்டியாராச்சி புறப்பட முன்னர் நீங்கள் தான் அவருக்கு ஐந்து லட்சம் ரூபா கொடுத்துள்ளீர்கள்'' என முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்புச் சபையின் பிரதானியுமான ரவீந்திர விஜேகுணவர்தன மீது முகத்திற்கு நேராக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன்போது பதற்றமடைந்த பாதுகாப்புச் சபையின் பிரதானி, ''சான், நீங்கள் இந்த நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீது குற்றஞ்சாட்டுகிறீர்கள். இவற்றை நிருபிக்க முடியுமாயின் நான் நாளையே பதவி விலகத் தயார்'' என்று கூறியுள்ளார்.

எனினும், அதிவேகப் படகு மூலம் சந்தன ஹெட்டியாராச்சி தப்பிச் சென்றதும், அவருக்கு 5 லட்சம் ரூபா பணம் கொடுக்கப்பட்டதும் முற்றிலும் உண்மையாகும். தற்போது ரவீந்திர விஜேகுணவர்தன பதவி வழங்க வேண்டும். அவர் எப்போது பதவி விலகப் போகிறார் என்பதே தற்போது எமது கேள்வியாகும்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top