1150 x 80 px
லண்டனில் அம்பலமான மைத்திரிக்கு எதிராக சூழ்ச்சி

பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கையின் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் நேருக்கு சந்தித்துக் கொள்ளவில்லை.

லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவும் ஒரு முறையேனும் சந்தித்துக் கொள்ளவில்லை.

இலங்கை பிரதிநிதிகள் என்ற ரீதியில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இருவரும் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து கொள்ளவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி சட்டத்தரணி, முன்னாள் சட்டமா அதிபர் ஆகியோர் அமைச்சர் திலக் மாரப்பன மீது கொண்டுள்ள கோபமே அதற்கு காரணமாகும் எனத் தெரியவருகிறது.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிப்பதற்கு அமைச்சர் திலக் மாரப்பன சம்மதம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி அறிந்து கொண்டமையினால் இந்த முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்.பிரேமதாஸ ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் திலக் மாரப்பன சட்ட மாஅதிபராக செயற்பட்டுள்ளார். இந்த காலத்தில் பிரேமதாஸ ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் போது இதற்கு எதிராக திலக் மாரப்பன பெரிய செயற்பாடு ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதியை பாதுகாத்துள்ளார்.

எனினும் இம்முறை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஜனாதிபதியை ஆட்சியில் இருந்து அகற்ற மாரப்பன முயற்சித்தாக ஜனாதிபதி தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top