1150 x 80 px
அர்ஜூன் மகேந்திரன், உதயங்க ஆகியோரின் சிவப்பு அறிவித்தலை மறுபரிசீலனை செய்யும் இன்டர்பொல்

தமக்கெதிரான சிவப்பு அறிவித்தல் அநீதியானது என ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் ஆகியோர் தனித்தனியாக சர்வதேச காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

தமது எதிரான இந்த அறிவித்தல் அரசியல் நோக்கத்திற்காக பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இதனைப் பரிசீலனை செய்யுமாறும் தமது சட்டத்தரணிகள் ஊடாக சர்வதேச காவல்துறையினரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உதயங்க மற்றும் அர்ஜூன் மகேந்திரன் முன்வைத்துள்ள கருத்துக்களை ஆராய்ந்து பார்க்குமாறு சர்வதேச காவல்துறையினர் இலங்கைக்கு அறிவித்துள்ளனர். இதுவொரு புரிந்துணர்வு ரீதியிலான தகவல் மட்டுமே என்றும் இலங்கையிடம் இருந்து எவ்வித பதிலையும் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரியவருகிறது.

சிவப்பு அறிவித்தலை இரத்துச் செய்வதற்கான முழுமையான அதிகாரமும் இன்டபொல்லிற்கு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், அரசியல் காரணங்களுக்காக இலங்கை சார்பாக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்படுகிறதா என்பது குறித்தும் சர்வதேச பொலிசார் தற்போது ஆராயத் தொடங்கியுள்ளனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top