1150 x 80 px
பீரிஸ் செய்துகொண்ட உலகின் தலைசிறந்த ஏற்றுமதி ஒப்பந்தம்!

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ஜி.எல்.பீரிஸ் வௌிவிவகார அமைச்சராக இருந்தார். இக்காலத்தில் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துடன் அதாவது அபுதாபியுடன் (Extradition treaty) ஏற்றுமதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டார். அந்த ஒப்பந்தம் தற்போது பாராளுமன்ற அனுமதிக்காக உள்ளது. பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அது இலங்கையில் சட்டமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

அபுதாபியுடன் பீரிஸ் செய்துகொண்ட ஒப்பந்தம் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின்படி அபுதாபிக்கு தேவையான சந்தேகநபர் இலங்கையில் இருந்தால் அவரை பிடித்து அபுதாபியிடம் ஒப்படைக்கும் ஏற்பாடு உள்ளது. ஆனால் இலங்கைக்கு தேவையான சந்தேகநபர் அபுதாபியில் இருந்தால் அவரை இலங்கைக்கு பிடித்து கொடுக்கும் கடப்பாடு அபுதாபிக்கு கிடையாது! ஒப்பந்தம் முற்று முழுதாக அபுதாபிக்கு மாத்திரம் நன்மை பயக்கும்.

"நீங்கள் விரும்பியதை செய்யவும்!"

சாதாரண மொழியில் சொல்வதாயின் இலங்கை அபுதாபிக்கு சொல்லும் செய்தி "நாம் நீங்கள் கேட்கும் சந்தேகநபர்களை எந்தவொரு நேரத்திலும் தரத் தயார். ஆனால் நீங்கள் அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு எங்கள் சந்தேகநபர்களை வைத்திருக்க முடியும்!"

அதனால் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு ஒப்படைக்குமாறு அபுதாபியிடம் கோர முடியாது. அப்படி கேட்டாலும் அவர்களை அதனை செய்யாதிருக்க முடியும். வரி சோசடியின் பிரதானி குதுபுதீன், பாதாள உலகக்குழுத் தலைவர் மதுஷ் போன்ற சந்தேகநபர்களை ஒப்படைக்குமாறு அபுதாபியிடம் கோர முடியாது. அப்படி கேட்டும் பயனில்லை.

எனவே பாரிய குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் டுபாய் நாட்டைத் தேடிச் செல்ல பிரதான காரணம் இதுவாகும். ஏற்றுமதி ஒப்பந்தம் என்பது சந்தேநபரை கொடுத்து சந்தேகநபர் வாங்குவதாகும். ஆனால் பீரிஸின் ஒப்பந்தத்தில் சந்தேகநபரை கொடுக்க முடியுமே தவிர வாங்க முடியாது.

ஜீ.எல்.பீரிஸுக்கு இந்த ஒப்பந்தத்தை எழுதி கொடுத்தது சஜின்வாஸ்?

பீரிஸ் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது ராஜபக்ஷ்வாதிகளே இந்த நாட்டை ஆண்டனர். ராஜபக்ஷக்களின் கறுப்பு பணம் முழுவதும் டுபாயில் இருப்பதாக கூறப்படுகிறது. சஜின்வாஸ் அடிக்கடி டுபாய் நோக்கி செல்பவர். வௌிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராக இருந்த இவர் மஹிந்தவின் நெருங்கிய சகா. அதனால் பீரிஸை ஆட்டிப்படைத்து குறித்த ஒப்பந்தத்தை சஜின்வாஸ் எழுதிக் கொடுத்திருக்கலாம் என்றே கூற முடியும். இலங்கை நீதிமன்றம் குற்றவாளி என அறிவிக்கும் நபர் ஒருவர் டுபாயின் இருந்தால் அவரைக்கூட இலங்கைக்கு கையளிக்க முடியாத அளவு இந்த ஒப்பந்தம் வலுவானது.

உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு கொண்டுவர பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ள சட்டமா அதிபர் திணைக்களமும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது. அதனால் உதயங்கவை நாடுகடத்தும் கட்டளை ஒன்றை நீதிமன்றம் வௌியிட வேண்டும். இலங்கை சட்டத்தின்படி நாடுகடத்தும் கட்டளையை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் பெற முடியும். இதன்படி குற்றவாளி அல்லது சந்தேகநபர் "சொந்த நாடு" அல்லாமல் "வந்த நாடு" என்பதற்கு நாடுகடத்த முடியும். அதன்படி உதயங்க யுக்ரேன் அல்லது அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட வேண்டும்.

இந்த காரணங்களால் இலங்கை தற்போது சட்டங்களில் சிக்கியுள்ளது. இதனால் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் திணறிப்போயுள்ளனர். ராஜபக்ஷக்கள் பின்னியுள்ள வலையை சரிசெய்வது அவ்வளவு சுலபமல்ல.

ஜீ.எல்.பீரிஸ் என்பவர் சிறந்த சட்ட புத்தகம் எழுதியவர். ஆனால் அவர் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு டுபாய் செல்லும் குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்கள் அங்கு போடும் ஆட்டத்தை பார்த்து இரசித்துக் கொண்டிருப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. அதனால்தான் பீரிஸ் செய்துகொண்ட ஒப்பந்தம் புதுமையானது என நாம் கூறுகிறோம்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top