1150 x 80 px
ஆட்சிக்கு வரும்முன் இப்படி என்றால் வந்த பின்..? ஊடகர்கள் அச்சம்!

நேற்று (13) கொழும்பு செங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற வியத்மக அமைப்பின் விசேட மாநாட்டிற்குப் பின்னர் வியத்மக அமைப்பில் உள்ளவர்கள் மாத்திரமன்றி ராஜபக்ஷ அணியின் பல தரப்பினரும் குழப்பத்தில் இருப்பதாக தெரியவருகிறது. வியத்மக அமைப்பை தவறாக பயன்படுத்தும் கோட்டாபாயவினால் அதன் முக்கிய உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாக நாம் செய்தி வெளியிட்டுள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தனது சகோதரர் கோட்டாபாயவின் நடவடிக்கை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதுடன் அதனை விமர்சித்தும் உள்ளார். வியத்மக அமைப்பின் மாநாட்டிற்கு பிரதான பேச்சாளராக ரொஹான் குணரத்ன அழைக்கப்பட்டமையை ராஜபக்ஷ ஆதரவு இணையங்கள் விமர்சித்துள்ளன.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமெரிக்காவின் முகவர், மேற்குலக நாடுகளின் கைக்கூலி, நாட்டை காட்டிக் கொடுப்பவர் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்ட ரொஹான் குணரத்ன தற்போது எப்படி தேசத்தை நேசிக்கும் நபரானார் என்று ராஜபக்ஷ அணியினரே கேள்வி எழுப்பியுள்ளனர்.

மாநாடு நடைபெற்ற செங்ரிலா ஹோட்டல் அமைப்பதற்கு அரசாங்க காணியை தாரைவார்த்துக் கொடுத்தது ராஜபக்ஷ அணியினர் என்பதை நாடே அறியும். அதற்கு நன்றி செலுத்தவென மாநாட்டிற்கு ஹோட்டல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிந்து 9 வருடங்கள் சென்றுள்ள நிலையில் யுத்த வெற்றி மற்றும் இனவாதத்தை விற்று தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கும் ராஜபக்ஷக்கள், அன்று யுத்தத்திற்கு எதிராக கதைத்தவர்களை இன்று ஒன்றுசேர்த்துக் கொண்டு புதிய நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். பிரபாகரனை தலையில் தூக்கிவைத்து ஆடியவர்களுடன் இன்று கோட்டாபாய ஆடும் நாடகம் என்ற என்பதை கூட்டு எதிர்கட்சியினர் கேள்வியாக எழுப்பி வருகின்றனர்.

ஊடக வேட்டையை கைவிடவில்லை

நேற்று இரவு மாநாட்டின் பின்னர் வெளியான இணைய செய்திகளை கோட்டாபய தனது அடியாட்களை பயன்படுத்தி அழித்துவிட்டார். ஆட்சியில் இருந்தபோது ஊடகவியலாளர்களை கொன்ற, கடத்தி, கை-கால்-தலை உடைத்த ரரஜபக்ஷக்கள் ஆட்சில் இல்லாத போதும் அதனை செய்கின்றனர். ஆட்சியில் இல்லாத போது தாங்களை விமர்சித்த ஊடகவியலாளர்களுக்கு இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நடப்பது என்ன என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

எனினும் லங்கா நியூஸ் வெப் குறித்து நன்கு அறிந்துள்ள கோட்டாபய இதுவரை நாம் வெளியிட்ட செய்து தொடர்பில் கருத்துகூட முன்வரவில்லை. அப்படியே அழுத்தங்கள் பிரயோகிக்க முயற்சித்தாலும் எந்தவொரு காரணத்திற்காகவும் நாம் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top