1150 x 80 px
எந்த அரசுக்கும், வங்கிக்கும் கட்டுப்படுத்த முடியாத பிட்கொயின்

மாற்றத்திற்காக புதிதாய் வரும் எதுவுமே மக்களின் ஆர்வத்தையம் சரி பயன்பாட்டையும் சரி சீக்கிரமாக தன்வசப்படுத்திக்கொள்ளாது. ஆனால் அதுவே பிந்நாளில் இலகுவான ஒன்று என புரிந்துவிட்டால் அது இலகுவில் அனைவருக்கும் பழகிவிடும்.

மனிதனின் இன்றைய வாழ்வியலுக்கு மிக முக்கியமானவை பணம். பண்டமாற்று முறை, உலோக நாணயங்கள், பணத்தாள், செலவட்டைகள் என இதன் வளர்ச்சி அளப்பரியது இவற்றின் அடுத்த கட்ட நகர்வே “பிட்கொயின்”

இந்த எண்ம நாணயம் “சடோஷி நகமோடோ” என்பவரால் 2009ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையின் மூலம் வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது . இன்று ஒவ்வொரு நாடுகளும் அந்நாட்டு பணத்தை தனக்கு தேவையான சந்தர்ப்பத்தில் கட்டுபடுத்தும் ஆனால் இந்த பிட்கொயினுக்கு அது சாத்தியமாகாது இதனை எந்நாட்டு அரசும் தன்னுடையது என உரிமம் கொண்டாட முடியாது மேலும் ஆரம்பத்தில் இதனை உருவாக்கும் போதே மொத்தம் 21 மில்லியன் தான் என புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.

கேள்விகளை பொருத்து பிட்கொயினின் பெறுமதியும் அதிகரித்து கொண்டே செல்லும் இது பிந்நாளில் மக்களின் பாவனை அதிகரிக்கும் பட்சத்தில் உதவிபுரியும் மேலும் ஒரு பிட்கொயினை சிறு பாகமாக வகுத்து மிகச்சிறிய அளவான, one hundredth millionth of a bitcoin ஆகவும் பயன்படுத்தலாம்.

உலகம் முழுவதும் உள்ள பிட் காயின் வாங்கும் மற்றும் விற்கும் நிறுவனங்கள் இவற்றிக்கு பக்கபலம் எந்த வங்கியின் தலையிடும் இல்லாத பிட்கொயின் கணக்கை இணையத்தின் மூலமாக யார் வேண்டுமானாலும் திறந்து பயன்படுத்தலாம்.

இது ஒரு நாட்டின் பணவீக்கம் இதர பொருளாதார கட்டுப்பாடுகள் என எதற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தாது என்பது தொழில்நுட்பப்பணத்தின் வியப்பு.

பிட்கொயின் மூலம் நாம் மேற்கொள்ளும் அனைத்து பரிமாற்றங்களுக்கும் ஆதாரமாய் Block Chain என்ற தொழில்நுட்பம் தொழிற்படும் இங்கு நமது பிட்கொயின் மூலமான எல்லா பரிமாற்றல்களும் பதிவிடப்படும் இதை எப்போது வேண்டுமானாலும் திறந்து பார்த்துகொள்ளலாம் இது வெளியில் சிந்த வாய்ப்பே இல்லை

இந்த பரிமாற்றல்களுக்கு நடுவில் அரசு, முகவர், வங்கி என எந்த மூன்றாம் நபரும் தலையிடமுடியாது உச்ச பாதுகாப்பில் இருக்கும் இந்த பிட்கொயின் கணக்கில் யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டன எனவும் தெரியாது யாவும் உங்களது பிட்கொயின் முகவரி (கிவ் ஆர்,QR Code) மூலமாகவே நிகழும்.

இன்று இந்த பிட்கொயின் பெறுமதியும் அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் தீடீர் பணக்காரர்களாக மாறியவர்களும் உண்டு. இருந்தும் குற்றச்செயல்களுக்கும் இது பயன்படலாம் என்பதில் ஐயமில்லை. அதேபோன்று நாளைய உலகை ஆட்டிப்படைக்க வல்லது இந்த தொழில்நுட்ப பணம் என்பதையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top