1150 x 80 px
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் அபாயம்

இலங்கையில் தற்போது அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியிருப்பதால் அற்றிருப்பதால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் அபாயம் இருப்பதாக இலங்கை வணிக சபை தெரிவித்துள்ளது.

அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியிருப்பதால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வணிக சபையின் இறக்குமதிப் பிரிவின் தலைவர் நிஷான் நாணயக்கார தெரிவித்தார்.

நேற்றைய நிலவரப்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி ரூபா 152.89 எனவும் விற்பனைப் பெறுமதி ரூபா 156.67 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களினால் முதலீடு செய்யப்படும் பணம், விற்பனை விகிதத்தை ஈடுசெய்யும் வகையில் இல்லை எனவும் நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

ரூபாவிற்கு நிராகராக டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால், இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top