1150 x 80 px
இலங்கையின் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் தேயிலை உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.9 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை அறிவித்துள்ளது.

சாதகமான வேளாண்மை மற்றும் பருவ நிலைமைகள் ஆகியனவே தேயிலை உற்பத்திக்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் காலநிலை சாதகமாக இருந்த போதிலும், அதற்கு முந்தைய இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டின் உற்பத்தி குறைவாகவே காணப்பட்டதாக இலங்கை தேயிலை சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஏ.சிறிவர்தன் தெரிவித்தார்.

கடும் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து ஏற்பட்ட வறட்சி, கிருமிநாசினிகள் மீதான அரசாங்கத்தின் தடை, மட்டுப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் ஆகிய காரணங்களினால் 2017ஆம் ஆண்டின் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இலங்கையின் சிறந்த விவசாய ஏற்றுமதி பொருளாக தேயிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top