1150 x 80 px
இன்றைய கோடீஸ்வரன் மூலம் ஐந்து கோடீஸ்வரர்

அபிவிருத்தி லொத்தர் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அதிஸ்டலாப சீட்டில் தற்போது அனைவரையும் கவர்ந்திருப்பது இன்றைய கோடீஸ்வரன். இந்த சீட்டிழுப்பில் விசேடம் என்னவெனில் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள் ஐந்து முறை கோடீஸ்வரர்களை உருவாகியுள்ளது.

இந்த சீட்டிழுப்பு அறிமுகம் செய்யப்பட்டு 06 மாதங்களே ஆகின்றன. இதுவரை ஐந்து கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளதாக தேசிய லொத்தர் அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

6 கோடி ரூபா வெற்றியாளர்கள் மூவரையும், ஐந்து கோடி ரூபா வெற்றியாளர் இருவரையும் இந்த சீட்டிழுப்பு உருவாக்கியுள்ளது. இந்த வெற்றித் தொகைக்கு மேலதிகமாக பத்து லட்சம் ரூபா வெற்றியாளர்கள் 89 பேரும், ஒரு லட்சம் ரூபா வெற்றியாளர்கள் 938 பேரும் உருவாகியுள்ளனர்.

லொத்தர் வரலாற்றில் இதுவரை உருவாக்காத பெரும் வெற்றியாளர்களை இன்றைய கோடீஸ்வரர் சீட்டிழுப்பு உருவாக்கியுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top