1150 x 80 px
அன்னாசி, வாழை உற்பத்திக்கு நிதியுதவி

அரச இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரத்தின் கீழ் இறப்பரை உற்பத்தி செய்வதற்கான காணிகளைப் பெற்றுக் கொண்டுள்ள உற்பத்தியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அந்தக் காணிகளில் ஊடுபயிராக அன்னாசி அல்லது வாழை உற்பத்திக்காக நிதியுதவி வழங்கப்படவுள்ளது. ஒரு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபா நிவாரண உதவியாக வழங்குவதற்கு பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சு முன்வந்துள்ளது.

இதற்கமைவாக, உற்பத்தியாளர் ஒருவருக்கு இரண்டு ஏக்கர் காணிக்காக 8 ஆயிரம் ரூபா நிதியை பெற்றுக் கொள்ள முடியும்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top