1150 x 80 px
லொத்தர் விற்பனை முகவர் பதவிகளை வழங்கும் வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

அபிவிருத்தி லொத்தர் சபை அம்பறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் விற்பனை முகவர்களுக்கு விற்பனை குடில்கள் வழங்கல் யுத்தத்தினால் பாதிப்புற்ற வட கிழக்கு இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு வழங்கும் முகமாக லொத்தர் விற்பனை முகவர் பதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் அபிவிருத்தி லொத்தர் சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வாய்ப்பு வழங்கப்படும் முகவர்களுக்கு தங்களின் வியாபார நடவடிக்கைகளை மேலும் திறன்பட இலகுவாக மெற்கொள்வதற்கு லொத்தர் குடில்கள் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் 100 விற்பனை முகவர்களுக்கு லொத்தர் குடில்கள் வழங்கல் நிகழ்வு கடந்த 2018.03.04 திகதி அம்பாறை மொன்டி ஹோட்டலில் வெற்றிகரமாக நடைப்பெற்றது.

இத் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்திற்கு 30 குடில்கள் ஜனவரி மாதம் வழங்கப்பட்டதுடன் அம்பாறை மாவட்டத்திற்கு 45 விற்பனை குடில்களும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 25 குடில்களும் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு.சேன சூரியப்பெரும அவர்களின் தலைமையில் அன்றைய தினம் வழங்கப்பட்டது.

சிறிய இருபது ரூபாய் பணத்தினால் நாம் அறியா மக்களின் வாழ்கை ஒளிபெருவதுடன் நாட்டின் அபிவிருத்தியில் பெரும் பங்காற்றும் விற்பனை முகவர்களின் வாழ்க்கையும் அதிர்ஷ்டகரமானதாகும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாட்டின் போது அவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றும் இடம்பெற்றது.

அதன்போது அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் விற்பனையில் மேம்பாட்டினை காட்டியூள்ள அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விற்பனை முகவர்கள் 14 ர் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு பணப்பரிசில்களுடைய காசோலைகளும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு அபிவிருத்தி லொத்தா; சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் திரு.எச்.ஆர்.விமலசிறி மற்றும் பதில் கடமை பொது முகாமையாளர் திரு. அநுர ஜயரத்ன உட ;பட அபிவிருத்தி லொத்தா; சபையின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
DLB 2

DLB 3

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top