1150 x 80 px
இந்திய மகேந்திர அன்ட் மகேந்திர நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகைள ஆரம்பித்தது

இந்தியாவில் வாகனத் தயாரிப்பில் முன்னணியில் திகழும் மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனம் இலங்கையில் அதன் வாகனபொருத்துதல் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இதனை முன்னெடுக்கவுள்ளதுடன், இந்த நிறுவனம் இலங்கையில் ஆரம்பிக்கவுள்ள கூட்டு நிறுவனத்துடன் 35 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கென மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனம் இலங்கையில் புதிய கம்பனியொன்றை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளதுடன் இந்நிறுவனம் இலங்கைப் பெறுமதி 25 கோடி ரூபாவை (10.4 கோடி இந்திய ரூபா) முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top