1150 x 80 px
சிம்புவுக்கு ஆதரவாக தனுஷ்?

இடைத் தேர்தலை விடவும் தமிழ் நாட்டின் சினிமா நிலவரம் தான் பல புதுப்புதுத் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தத் திருப்பங்களில் ஒன்றாக சிம்பு இசையமைத்த ''சக்கப் போடு போடு ராஜா'' இசை வெளியீட்டில் தனுஷ் கலந்துகொண்டதும், புதிய திருப்பங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

சிம்புவும், தனுசும் அவ்வளவு நெருக்கமானவர்கள் இல்லை என்பது திரையுலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இருந்தாலும் இந்த இசை வெளியீட்டு மேடையில் அவர்களது நெருக்கத்தையும், பாசத்தையும் பார்த்தவர்களுக்கு விக்ரமன் படப்பாடல் பின்னணியில் ஒலித்திருக்கும்.

சிம்பு மீது தனுசுக்கு ஏன் இந்த திடீர் பாசம் அல்லது தனுஷ் மீது சிம்புவக்கு ஏன் இந்த திடீர் பாசம் என பலரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பார்கள். விஜய், அஜித்திற்குப் பின்னர் சிம்பு, தனுஷ் என ஒரு நிலை உருவாகலாம் என சில வருடங்களுக்கு முன்பு பேசப்பட்டது.

ஆனால், சிம்புவால் தொடர்ந்து வெற்றியைக் கொடுக்க முடியவில்லை. அவரைப் பற்றியும் பல சர்ச்சைகள்.

இந்த நிலையில், ''சக்கப் போடு போடு ராஜா'' நிகழ்ச்சி மேடையில் நடந்த சிம்பு - தனுஷ் பாசம் அவர்களது ரசிகர்களைப் பொறுத்தவரையில் ஒரு கொண்டாட்டத்தைக் கொடுத்திருக்கும்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top