1150 x 80 px
நடுவானில் பாலியல் தொல்லை: தங்கல் பட நடிகை குற்றச்சாட்டு

விமானத்தில் நடுவானில் தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக தங்கல் இந்தி படத்தில் நடித்த நடிகை ஜைரா வாசிம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நடிகர் அமீர்கானின் நடிப்பில் வெளியான இந்தி படம் தங்கல். இதில் அவரது மகளாக நடிகை ஜைரா வாசிம் (வயது 17) நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக ஜனாதிபதியிடம் இருந்து சிறந்த சாதனையாளருக்கான தேசிய குழந்தைகள் விருதும் அவர் பெற்றுள்ளார். படத்தில் மல்யுத்த வீராங்கனையாக வரும் அவர் போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றி பெறுவார்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் அந்த அதிர்ஷ்டம் அவருக்கு இருக்கவில்லை. விமான பயணம் ஒன்றில் தனக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதில், ஏர் விஸ்தாரா விமானம் ஒன்றில் ஜைரா பயணம் மேற்கொண்டு உள்ளார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அவரது பின் இருக்கையில் அமர்ந்திருந்த நடுத்தர வயது நபர் ஒருவர் ஜைராவிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

இதுபற்றி அழுதுகொண்டே அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார். இது மிக பயங்கரமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

விமானத்தில் இருந்த ஒருவரும் தனது உதவிக்கு வரவில்லை. இதுவா சிறுமிகளை நீங்கள் கவனித்து கொள்ளும் விதம்? எங்களை போன்ற சிறுமிகளுக்கு உதவ யார் இருக்கின்றனர்? எங்களுக்கு நாங்களே உதவி செய்து கொள்ளவில்லை எனில் ஒருவரும் உதவிக்கு வரமாட்டார்கள் என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ: 

https://www.instagram.com/p/Bcf4EgeA4P6/?hl=en&tagged=zairawasim

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top