1150 x 80 px
நடிகை பாவனாவுக்கு திருமணம்

நடிகை பாவனாவுக்கும், கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும், எதிர்வரும் 22ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பாவனாவும், கன்னட தயாரிப்பாளர் நவீனும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில் நடிகை பாவனாவின் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்றது.

அதன்பிறகும் காதலில் விடாப்படியாக இருந்த பாவனாவும், நவீனும் இரு வீட்டார் சம்மததுடன் நிச்சயத்தார்த்தம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் டிசம்பர் 22ஆம் திகதி நடக்க இருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளிப் போனது.

இந்நிலையில் நடிகை பாவனாவுக்கும், கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும், எதிர்வரும் 22ஆம் திகதி திருமணம் நடப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திருச்சூரில் உள்ள நேரு அரங்கில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top