1150 x 80 px
வாழ்நாள் முடிவதற்குள் இந்தியாவை பெருமையடையச் செய்வேன் - கமல்

என் வாழ்நாள் முடிவதற்குள் இந்தியாவை பெருமையடையச் செய்வேன் என சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

சென்னை வேளச்சேரியில் என்ற இடத்தில் கனரா வங்கியின் டிஜிட்டல் கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தனது உரையில் “நாட்டின் அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து ஆகியன மீண்டும் கட்டமைக்க வேண்யுள்ளது. அதை டிஜிட்டல் முறையில் செய்யவே நான் எண்ணியுள்ளேன். அதை என் ஆயுள் முடிவதற்குள் செய்வேன்.

தமிழகத்தில் இருந்தே எமது நாட்டின் பெருமை தொடங்குகின்றது. அது சம்பந்தமான வேலைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிப்பேன். அதன் மூலம் பல உறவுகள் என்னைச் சுற்றி உருவாகும்.

அடுத்த மாதம் 21 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் எனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளேன். காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டிலிருந்து எனது அரசியலை ஆரம்பிக்க இருக்கின்றேன்.

அதற்கான வேலைகளில் எனது நற்பணி மன்ற நிர்வாகிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top