1150 x 80 px
முதன்முறையாக ஒரு படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்

வித்தியாசமான கதைகளைக்கொண்ட திரைப்படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதியுடன் அடுத்து நடிக்கவுள்ள “மாமனிதன்” திரைப்படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைக்கின்றனர். இது குறித்து யுவன்சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற படமான “தென்மேற்குப் பருவக்காற்று”, மற்றும் “தர்மதுரை” போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சீனுராமசாமி மீண்டும் விஜய் சேதுபதியுடன் “மாமனிதன்” படத்தில் இணைந்துள்ளார்.

வரலாற்றுப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா குடும்பத்தில் உள்ள இசையமைப்பாளர்கள் மூன்றுபேர் இணைந்து ஒரு படத்திற்கு இசையமைக்கவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா, தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வை.எஸ்.ஆர் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கவுள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top