1150 x 80 px
பாடசாலை பெண் அதிபரை முழங்காலில் வைத்தமைக்கு எதிராக மனித உரிமைகள் விசாரணை

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவினால் பதுளை தமிழ் வித்தியாலயத்தின் பெண் அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்து அவரை முழங்காலில் வைத்தமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த அதிபரிடம் தற்போது விசாரணை செய்து தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இதுதொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கையொன்று பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஊவா மாகாண முதலமைச்சரின் கடிதம் ஒன்றிற்கு குழந்தையொன்றை பாடசாலையில் சேர்த்துக் கொள்ளாமை காரணமாக பதுளை தமிழ் பாலிக்கா வித்தியாலயத்தின் பெண் அதிபருக்கு இவ்வாறு அச்சுத்தம் விடுக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஊவா மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தாம் முதலமைச்சரின் அச்சுறுத்தல் காரணமாக அவருக்கு முன்பாக முழங்கால் இட்டு மன்னிப்பு கோரியதாக பெண் அதிபர் நேற்று (19) குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் முதலச்சரிடம் இருந்து விடுக்கப்படவில்லையென முதலில் கூறியபோதிலும், அவ்வாறு கூறியது தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாகவே என நேற்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு முன்னால் அந்த பெண் அதிபர் தெரிவிததிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Top