1150 x 80 px
சிறுமிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜனாதிபதி

எம்.என். அமானி என்ற 07 வயது சிறுமி பதுளையில் இருந்து தனது பெற்றோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்க கொழும்பு வந்திருந்தார்.

முன் அறிவித்தல் இன்றி வந்த இவர்களுக்கு ஜனாதிபதியைச் சந்திப்பர் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. என்ற போதிலும், ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி அலுவலகம் முன்பாக சிறுமியொருவர் ஆர்வத்துடன் இருப்பதாக அறிந்த ஜனாதிபதி, வேலைப் பளு இருந்த போதிலும் பாதுகாப்புத் தரப்பினரை அனுப்பி சிறுமியை அருகில் அழைத்துவந்துள்ளார்.

சிறுமி வரைந்து கொண்டுவந்திருந்த ஓவியம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் சிறுமி கையளித்தார். இதன்போது பதுளைக்கு வரும்போது தனது வீட்டிற்கு வருமாறு ஜனாதிபதியிடம் சிறுமி கோரியிருந்தார்.

பதுளையில் கடந்த 28ஆம் திகதி நடந்த கூட்டமொன்றுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி, பின்னர் சிறுமியின் கோரிக்கையை நினைவில் வைத்திருந்து அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்திற்கு குறித்த சிறுமியின் நண்பர்கள், அயலில் உள்ள சிறுவர் சிறுமியையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

இதன்போது சிறுவர்கள் பாடி மகிழ்ந்ததை ரசித்த ஜனாதிபதி, மீண்டும் கொழும்பு வரும் போது தன்னைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் விடைபெற்றார்.

படங்கள் : ஜனாதிபதி ஊடகப் பிரிவு

amani rayida 001

amani rayida 002

amani rayida 003

 

Top