1150 x 80 px
ஐந்து நட்சத்திர ஹோட்டலையும் வீழ்த்தும் இலங்கையின் புது அதிசொகுசு ஹோட்டல்!

நாட்டில் பணக்கார வர்க்கம் செல்லும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கும் மேல் அதிசொகுசு கொண்ட ஹோட்டல் ஒன்று இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது. அதற்கு பெயர் 'ஹோட்டல் டி பிரிசன்' (Hotel De Prisons) ஆகும்.

இந்த ஹோட்டலுக்கு உள் நுழைய அனுமதி கிடைத்தவுடன் உங்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய பெக்கஜ்கள் அறிமுகப்படுத்தப்படும். அதற்கு இருக்க வேண்டிய ஒரே தகுதி கை வீசி நன்கு பணம் செலவு செய்யக்கூடிய தகுதியாகும். உங்களிடம் உள்ளது கறுப்பு பணம் எனில் அது மேலதிக தகைமையாக கருதப்படும்.

இலங்கையில் வேறு எந்த அதிசொகுசு ஹோட்டல்களிலும் கிடைக்காத சலுகைளை Hotel De Prisons இல் வழங்க அதன் சேவையாளர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

Hotel De Prisons இல் கட்டில் ஒன்றை பெற்றுக் கொள்ள 25000 ரூபா போதுமானது. அதைவிட சலுகை தேவை எனில் நாளாந்தம் 50000 ரூபா செலவு செய்தால் போதும். இதை கொடுத்தால் உங்கள் வீட்டில் இருந்து வழங்கப்படும் அனைத்தும் கையில் வந்து கிடைக்கும்.

ஹில்டன் போன்ற அதிசொகுசு ஹோட்டல்களில் அறை ஒன்றை பெற்றுக் கொள்ள நாள் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர் செலவாகும். ஆனால் Hotel De Prisons இல் நாள் ஒன்றுக்கு 312 டொலர் செலவு செய்ய வேண்டும். அதனால்தான் இது ஐந்து நட்சத்திர ஹோட்டலைவிட பெறுமதியானது என்று நாம் கூறுகிறோம்.

Hotel De Prisons ஹோட்டல் என்னவென்று அனைவருக்கும் புரியும் மொழியில் கூறினால் அதுதான் சிறை வைத்தியசாலை.

ஒரு குற்றமும் செய்யாத அப்பாவி நோயாளர்கள் தேசிய வைத்தியசாலையில் நுளம்பு கடியில் இருந்து கஸ்டப்படும் நிலையில் கொலை, கொள்ளை, கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் சிறைக்குச் சென்றதும் புதுமையாக உலகில் இல்லாத நோய் அவர்களை பீடித்துவிடும். உடனே அவர்கள் சிறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

அங்கு குற்றவாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி வைத்தியசாலை வைத்தியர் தொடக்கம் சிற்றூழியர் வரை பணம் உழைக்கும் மாபியாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

Top