மீதொட்டமுல்ல ஜனாதிபதியின் விசேட நடவடிக்கை Featured
- - Apr 19, 2017

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் முழுமையாக பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக இன்று (19) முற்பகல் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.
மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் இடர் வலையத்திலுள்ள மக்களை மீட்பதற்கு முன்னுரிமையளித்து, அவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் உதவியுடன் எதிர்வரும் சில மாதங்களில் அப்பிரதேசத்திலுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவும், சட்டவிரோதமாக குடியேறுவதை தடைசெய்வதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
Additional Info
இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]