யுத்தத்தினால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தலுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு ! Featured
- - May 18, 2017

யுத்தத்தினால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் இன்று (18) முல்லைத்தீவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளை நிறுத்துமாறு நேற்று (17) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு தேசிய பாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஒற்றுமைக்கான மிரட்டல் எனில் அவ்வாறான நிகழ்வுகளை 14 நாட்களுக்குள் நடத்துவதற்கு தடை எனவும் அவ் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லை வயல்காடு புனித பாபுல் தேவாலயம், அரசியல் கட்சிகள், ஏனைய அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்திருந்தாலும் கூட உயிரிழந்த தமது உறவுகளுக்காக நினைவஞ்சலி செலுத்துவதிலும் வடகிழக்கு மக்களுக்கு சுதந்திரம் இல்லை.
Additional Info
இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]