1150 x 80 px
ஊடக ஒழுக்கச் சட்டம் அடக்குமுறைக்கான ஆரம்பம்!

ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமும் கடந்த கால ராஜபக்சவின் ஆட்சியைப் போன்று ஊழல்களுக்கு எதிரான முறைப்பாடுகளை மூடிமறைக்கும் மற்றும் திருடர்களை பாதுகாக்கும் கைங்கரியத்திலும் ஈடுபட்டு வருகிறது என ஜே.வி.பி குற்றம் சாட்டியுள்ளது.

திருடர்கள் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூடி கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்திருந்த போதிலும் அதில் ஒன்றேனும் இதுவரை நடைபெறவில்லை என்றும் ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.

ஜே.வி.பியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

அதிக செலவீனம் என்ற காரணத்தினால் ஊழல், மோசடி விசாரணை செயலகத்தை மூடிவிடுவதற்கு அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் பல்வேறு வகையில் விமர்சனங்களும், எதிர்ப்புக்களும் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்திற்கு கடுமையான தனது எதிர்ப்பினை வெளியிட்டார்.

“குடும்ப ஆட்சியால் ஏற்பட்ட ஊழல், மோசடிகளே ராஜபக்சவின் ஆட்சியைத் தோற்கடிப்பதற்கு பிரதான காரணமாகும். ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்திற்கு முன்பாக கொண்டுவருவேன், தண்டனை பெற்றுக் கொடுப்பேன், கட்டுநாயக்க சர்வதேச விமானத் தளத்தை மூடி திருடர்களை நாட்டை விட்டுத்தப்பிச் செல்ல விடமாட்டேன் என்று பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார். அந்த ஒன்றும் இன்று நிறைவேற்றப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கம் அதற்குப் பதிலாக மீண்டும் ஊழல், மோசடிகளுக்கு இடங்கொடுக்கிறது. இன்னும் சிறிதுநாட்களில் பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவை அரசாங்கம் மூடிவிடும் அதற்காகவே இந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன. ஊழல் மோசடி செயலகத்தை மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மூடிவிட்டால் முறைப்பாடுகள் வராது, அந்த அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி முறையிடவும் செயலகம் இல்லை, பொலிஸ் நிதிமோசடி பிரிவுக்கு முறையிடமுடியாது. அதனால் இயல்பாகவே அந்த பிரிவும் மூடப்பட்டுவிடும். தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்ட உறுதிகளுக்கு மாறாக பழைய திருடர்களை காப்பாற்றுதலும், புதிய திருடர்களை கரைசேர்ப்பதுமே நல்லாட்சியிலும் இடம்பெறுகிறது” என்றார்.

இதேவேளை புதிய அரசியலமைப்பு மீதான முட்டுக்கட்டைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியைப் போன்று புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பின் பிரகாரம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.

“புதிய அரசியலமைப்பை நிறுவி நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதாகக் கூறியே ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்தார். பொது வேட்பாளராக அவர் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தற்போதிருக்கின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்குப் பதிலாக அமைச்சரவையின் ஊடாக நாடாளுமன்றம் தொடர்பாகும் அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பதுடன், சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைத்தல், புதிய அரசியலமைப்பு உருவாக்கல் என்பன முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதானது ஜனநாயகத்திற்காக செய்ய வேண்டிய விடயமாகும். அதற்காக புதிய அரசியலமைப்பு அவசியம். நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பினால் அது நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோன்று தற்போதுள்ள அரசியலமைப்பு 35 வருட பழைமைவாய்ந்தது. இந்நிலையில் தற்காலத்திற்கு ஏற்ப புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது கட்சி இருக்கின்றது. மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தல் மேடையில் கூறியதாவது நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதாக உறுதியளித்தே வெற்றிபெற்றார். பிரசார மேடைகளிலும், ஊடகங்கள் மூலமாகவும் இந்த நாட்டு மக்களுக்கு இதனை அறிவித்திருந்தார். சர்வஜன வாக்கெடுப்பின்றி முடியாது நிறைவற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க முடியாது. இதுதான் தெளிவான சட்டநிலை. அதனால் அவர் கூறிய விடயம் மற்றும் 100 நாள் அரசாங்கத்தினாலும் கூறிய விடயத்திற்கமைய சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்வது அவசியம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் கூறுகின்ற விடயம் திரைமறைவு விடயங்களாகும். எனவே மக்களுக்கு கூறியபடி சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டியது கட்டாயமாகும்” எனக் குறிப்பிட்டார்.

(Igprp jkpo;)

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top