1150 x 80 px
இந்தியாவுக்கு பயணமானார் மகிந்த

முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ மூன்று நாள் விஜயத்தை மேற்­கொண்டு இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்­தி­யாவுக்கு சென்றுள்ளார்.

சர்­வ­தேச பௌத்த கலா­சார சம்­மே­ளனத்தின் ஏற்பாட்டில் மக­ராஷ்­டிரா மாநி­லத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் பௌத்த கலா­சார மாநாட்டில் கலந்­து­கொள்ளவே அவர் அங்கு பய­ண­மா­கியுள்ளார்.

இம்மாநாட்டில் கலந்­து­கொண்டு பிர­தான உரை­யாற்­று­மாறு அச்­சம்­மே­ள­னத்தின் பிர­தா­னிகள் முன்னாள் ஜனா­தி­ப­தி­யிடம் கேட்டுக் கொண்­டதற்கு இ­ணங்க அவர் அங்கு சிறப்பு உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top