1150 x 80 px
மதுபான சட்டம் குறித்த மங்களவின் வர்த்தமானி இரத்துச் செய்யப்படுகிறது

பெண்களுக்கு மதுபானம் கொள்வனவு செய்ய முடியாதிருந்த சட்டத்தை இரத்துச் செய்து, மதுபான கொள்வனவு நேரத்தை நீடித்து, நிதியமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகியுள்ளதாக லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இலங்கை சிங்கள பௌத்த நாடு எனவும், மேற்குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலினால் நாட்டில் ஒழுக்கம் சீர்கெட்டுப் போகும் என்பதால் ஜனாதிபதி இந்தத் தீர்மானித்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் லங்கா நியூஸ் வெப் இணையத்திற்குத் தெரிவித்தார்.

18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மதுபான கொள்வனவிற்கு செய்வதற்கும், பெண்களுக்கு மதுபான சாலைகளில் பணியாற்றவும் அனுமதியளிக்கப்படும் என கடந்த 10ஆம் திகதி அரசாங்கம் அறிவித்திருந்தது.

1955ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி பெண்களுக்கு மட்டும் மாற்றுச் சட்டம் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்படுவதாகவும், இதனை சரிசெய்வதற்கே சட்டத்தில் மாற்றம் செய்யப்படுவதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top