1150 x 80 px
வடக்கில் 274 பேர் A3 சித்திகளைப் பெற்றுள்ளனர்

2017 ஆண்டு கல்வப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய வடக்கு மாகாணத்தில் 274 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.

வடமாகாணத்தில் 2017ஆம் ஆண்டு 11,591 மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதியிருந்தனர். இவர்களில் 8,956 பேர் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றுள்ளனர். 816 மாணவர்கள் மட்டுமே பரீட்சையில் தேர்ச்சி பெறவில்லை என புள்ளிவிபரங்கள் கூறுகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் 68.37 சதவீதமானோர் சித்தியடைந்துள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் அதிகூடிய சதவீதமாக 68.41வீதமானோர் சித்தியடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 66.47 வீதமானவர்களும், யாழ் மாவட்டத்தில் 65.88 வீதமானவர்களும் சித்தியடைந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 64.51 வீதமானோரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 62.31 வீதமானோரும் சித்தியடைந்துள்ளனர்.

நீண்ட காலம் போரினால் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் இந்த பெறுபெறுகள் என்பது நல்ல அடைவு நிலையைக் காண்பிப்பதாக வடமாகாண கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top