1150 x 80 px
பிணை முறி மோசடி தொடர்பான இறுதி நடவடிக்கை கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் : கருஜயசூரிய

எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி எடுக்கவுள்ள இறுதித் தீர்மானம் தொடர்பாக அறிவிக்கப்படுமென சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றைய தினம் (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பில் எவ்வித பாகுபாடும் இன்றி செயற்பட வேண்டியது நாடாளுமன்றத்தின் கட்டாயக் கடமையாகும் எனவும் சபாநாயகர் கருஜயசூரிய இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை உடனடியாக மொழிபெயர்த்து மற்றும் அச்சிட்டு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சபாநாயகர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top