1150 x 80 px
மதுபானம் வழங்கி தேர்தல் பிரசாரம் செய்கின்றனர் : சாந்தினி கோன்கஹகே

மத்திய மாகாணத்தில் பல பிரதேசங்களில் பணமும். சாராயமும் வழங்கி சிலர் தேர்தல் பிரசாரங்களை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் உதவிச் செயலாளரும் மத்திய மாகாண உறுப்பினருமான சாந்தினி கோன்கஹகே தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களுக்கு அமைய அனைத்து பிரசாரங்களும் உரிய திகதியில், நேரத்தில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தலாஓய கதாகுல பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
''தேர்தலுக்கான இந்த இறுதி நாட்களில் மலையக தோட்டப் புறங்களில் உள்ள மக்களுக்கு பாரியளவில் சாராயத்தை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். பெட்டிகள் கணக்கில் போதல்களை விநியோகித்து மக்களை பிழையாக வழிநடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர். மிகவும் பொறுப்புடன் இதனைக் கூறுகிறேன். பொலிசார் தமது கடமையைச் சரியாக செய்ய வேண்டும். எங்காவது மதுபான போத்தல்களை சேமித்து வைத்துள்ளார்கள், விநியோகிக்கிறார்கள் என்று அறிந்தால் இதுகுறித்து பொலிசாருக்கு அறிவிக்க வேண்டும். யாராவது பொலிசாருக்கு முறையிட்டால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நேரங்களில் 199 அவசர இலக்கத்திற்கு அழைத்தாலும், துரிதமாக இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. சுயாதீன தேர்தல் ஆணைக்குழு சரியாக செயற்பட வேண்டுமாயின், இந்த இறுதி நாட்களில் சரியாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் என நம்புகிறோம்.''

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top