1150 x 80 px
வன்முறையில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடு

வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் அல்லது வாக்களிப்பு நிலையங்களில் வன்முறையான செயற்பாடுகளில் ஈடுபட முயற்சித்தல் மற்றும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறன.

வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், வாக்களிப்பு தொடர்பிலான ஒத்திகை ஒன்றையும் அதிகாரிகள் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top