1150 x 80 px
திருகோணமலையில் வாக்குப் பெட்டிகள் விநியோகம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு திருகோணமலையில் வாக்குப் பெட்டிகளின் விநியோகம் இன்று காலை ஆரம்பமாகியிருந்தது.

இதேவேளை தேர்தல் சட்டங்களை முழுமையாக அமுல்படுத்துவதாகவும், திருகோணமலை மாவட்டத்தில் சுதந்திரமாக தேர்தலை நடத்த பொலிஸாருக்கும் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சஜித் வெல்கம தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 220 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2,368 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 23 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேட்சைக்குழுக்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில் 272,822 பேர் திருகோணமலை மாவட்டத்தில் வாக்களித்த தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top