1150 x 80 px
உதயங்கவினால் டுபாயில் பிடியாணை உள்ள 16 பேர் விடுதலையாகும் அறிகுறி

உதயங்க வீரதுங்கவை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், டுபாயில் இன்டர்பொல் பிரிவினருக்கும், இலங்கை இன்டர்பொல் பிரிவினருக்கும் இடையே பாரிய கொள்கை முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரத்துச் செய்யப்பட்ட இராஜதந்திர கடவுச் சீட்டைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குப் பயணிக்க முயற்சித்த போது டுபாய் விமான நிலையத்தில் உதயங்க தடுத்துவைக்கப்பட்டார். எனினும், இந்த கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட்டுள்ளதை தான் அறியவில்லை என உதயங்க டுபாய் இன்டர்பொல் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

உதயங்கவின் இந்த ''தெரியாது'' என்ற பதிலை இன்டர்பொல் பிரிவினர் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

காரணம் கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக உரிய முறையில் அறித்தமைக்கான ஆவணம் எதுவும் இல்லாததால் பயணி அறிந்திருக்க வாய்ப்பில்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இன்டர்பொல் பொலிஸ் இரு(ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், உதயங்கவை கையளிக்க முடியாது என டுபாய் இன்டர்பொல் பிரிவினர் தெரிவிக்கின்றனர். எனினும், டுபாய் தரப்பில் இருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள 16 விண்ணப்பங்கள் இருக்கின்றன. இலங்கை தரப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், டுபாய் தரப்பினரின் கோரிக்கையை இழுத்தடிப்புச் செய்ய இலங்கைத் தரப்பு உத்தேசித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனை அறிந்துகொண்ட டுபாய் இன்டர்பொல் பிரிவினர் ''அவ்வாறு செய்ய வேண்டாம். நாங்கள் உங்களின் கோரிக்கையை ஆராய்ந்து பார்க்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top