1150 x 80 px
நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோருகிறார் மகிந்த

நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற நிலையை சுமூகமாக்குவதற்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்வதே சிறந்த தீர்வு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து இன்று கொழும்பில் நடைபெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அரசியலமைப்பின்படி நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியாது எனத் தெரிவித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த மஹிந்த, அதனாலேயே நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை கோருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகத்தான வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top