1150 x 80 px
அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானம்

அரசாங்கத்தில் உள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவின் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உள்ளுராட்சி சபையின் தேர்தல் முடிவுகள் குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் ஆழமாக பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனிடையே ஜே.வி.பியுடன் இணைந்து பிரபல எதிர்க்கட்சியொன்றைக் கட்டியெழுப்புவது குறித்து மத்திய செயற்குழுக் கூட்டம் பேச்சு நடத்தியுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகிய பின்னர் அரசியலமைப்பின்படி அமைச்சரவையை மறுசீரமைக்க நேரிடும். இதன்படி, எதிர்காலத்தில் பெரும்பான்மை அல்லாத அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்தோ, பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை ஸ்தாபிப்து குறித்தோ ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்க நேரிடும்.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செவ்வாய்க்கிழமை விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top