1150 x 80 px
ஐக்கிய தேசியக் கட்சி தனித்து அரசாங்கம் அமைக்கத் தீர்மானம் : TNA உடனும் பேச்சு

ஐக்கிய தேசியக் கட்சி தனித்து அரசாங்கமொன்றை அமைக்க தீர்மானத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பதும், அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால அரசியலை எவ்வாறு பாதிக்கும் என்பதைக் கணிக்க முடியாதிருப்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தரப்பினர் இதுகுறித்து ஆழமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் கிட்டியுள்ளன.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பதானது எதிர்காலத்தில் சிங்கள மக்கள் மத்தியிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ள செல்வாக்கில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற நிலையும் இருக்கிறது.

இந்த நிலையில், தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளிவர வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நேற்று தீர்மானிக்கப்பட்டது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top