1150 x 80 px
தனித்து அரசாங்கம் அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையினர் அனுமதி

ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கம் எந்த நேரத்திலும் வீழும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அந்தக் கட்சியில் உள்ள பெரும்பான்மை எம்.பி.க்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (13) பிற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றை விரைவில் ஸ்தாபிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தத் தேவையில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top