1150 x 80 px
நாலக கொடகேவாவிற்கு நீதிமன்ற அழைப்பாணை

நாணயமாற்று பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் நாலக கொடஹேவா உள்ளிட்ட மூவருக்கு எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இன்று (14) அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.துனுசிங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பொதுமக்களின் பணத்தை முறையற்றவிதத்தில் கையாண்ட குற்றச்சாட்டில் நாலக கொடஹேவா, தம்மிக்க பெரேரா, டொனி பீடர்சன் ஆகிய மூவருக்கே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாணயமாற்று பாதுகாப்பு ஆணைக்குழுவிற்குச் சொந்தமான 5 மில்லியன் ரூபா பணத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்க குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top