1150 x 80 px
கோமாளித்தனமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது : சம்பிக்க

பிறந்தது முதல் மோசடியான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நபர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்து வருவதாக அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜாதிலக ஹெல உறுமய கட்சித் தலைமையகத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இவ்வாறு குற்றஞ்சுமத்தும் தரப்பினர், தியதலவா பிரதேசத்தில் கைக்குண்டொன்று பேருந்தில் வெடித்த சம்பவத்தின் போது, அது விடுதலைப் புலிகளின் செயல்பாடு எனத் தெரிவித்திருந்தனர். எனினும், இதன் உண்மை தற்போது வெளிவந்துள்ளது என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இராவனா பலய என்ற அமைப்பிற்கு போக்குவரத்து, பணம் உள்ளிட்ட உதவிகளைச் செய்து, வழக்குகளை எதிர்கொண்டுள்ளவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மஹசோன் படையணி அல்லது வேறு எந்த படையணியின் பின்னணியில் இருப்பவர்களை யார் என்பதைக் கண்டறிந்து பகிரங்கப்படுத்தும் பொறுப்பு பொலிசாருக்குரியது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top