1150 x 80 px
நாடு முழுவதும் 600 மாதிரிக் கிராமங்கள் : வடக்கில் 150 கிராமங்கள்

''அனைவருக்கும் புகலிடம்'' என்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 600 கிராமங்களை உருவாக்கும் வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 150 கிராமங்களில் வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் லக்டிஜய சாகர பலங்சூரிய தெரிவித்துள்ளார்.

மாதிரிக் கிராமங்கள் நிர்மாணிக்கப்படும் பணிகளின் தரம் குறித்து இன்று (14) நேரடியாக சென்று ஆராய்ந்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அதிகார சபையின் தலைவர்,

வடக்கில் நிர்மாணிக்கப்படும் 150 மாதிரிக் கிராமங்களில் 48 கிராமங்கள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 2300 மில்லியன் (230 கோடி) ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்தக் கிராமங்கள் அமைக்கப்படுகின்றன.

அத்துடன், வவுனியா போகஸ்வெவ வீடமைப்புத் திட்டத்திற்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 1000 மில்லியன் ரூபா 2017ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனைக்கமைய இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

samata sewana 1

samata sewana 02

samata sewana 3

samata sewana 4

 

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top