1150 x 80 px
முகநூலில் இனவாதத்தைத் தூண்டிய முன்னாள் இராணுவ அதிகாரி விளக்கமறியலில்

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் முகநூல் ஊடாக குரோத கருத்துகளைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 3ஆம் திகதி வரை இந்த அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டார்.

கம்பஹ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஏ.கே. கிரிஷானன் ஸ்ரீநாத் பெரேரா என்ற சந்தேக நபருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சாட்சிகளுடன் முன்வைக்கப்படவில்லை என்று சந்தேக நபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மன்றில் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதவான் குறித்த அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் மூன்றாவது பிரிவின் அடிப்படையில் சந்தேக நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பிணை வழங்கும் அதிகாரம் தமக்கு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபர் இணையத்தில் தொடர்பு கொள்ள பயன்படுத்திய கணினி மற்றும் கைத் தொலைபேசி தொடர்பில் அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விசாரணைக்கு தேவையான சந்தேக நபரின் முகநூல் தொடர்பான விபரங்களை முகநூல் தலைமைக் காரியாலயம் மூலம் பெற்றுக் கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன் வைத்த வேண்டுகோளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top