1150 x 80 px
அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து ஶ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் ஆலோசனை

இன்று (10) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என அமைச்சர்கள் சிலர் யோசனை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து விரிவான பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா இல்லையா என்பது குறித்து நாளை (11) மீண்டும் கூடி ஆராய தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top