1150 x 80 px
மொழி உரிமைப் பிரச்சினைகளுக்கு நவீன அழைப்பு நிலையம்

மொழி உரிமைப் பிரச்சினைகளுக்கான நவீன அழைப்பு நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றது.

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சில் அமைக்கப்பட்டுள்ள நவீன அழைப்பு நிலையத்தினை நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

‘இந்த நவீன அழைப்பு நிலையத்தின் மூலமாக, 094714854734 என்ற இலக்கத்தைப் பயன்படுத்தி வட்ஸப், வைபர், போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும், இவற்றுக்கு மேலதிகமாக முகநூல் மூலமாகவும் மொழி உரிமை மற்றும் மொழிச்சட்ட அமுலாக்கல் தொடர்பான பிரச்சனைகளை எமது அமைச்சுக்கு அறிவிக்கலாம்.

இந்த புதிய தொடர்பாடல் முறைமைகளுக்கு மேலதிகமாக 1956 இலகு அழைப்பு (Hotline) இலக்கமும், https://www.facebook.com/LanguageRIGHTS/ என்ற முகநூல் பக்கத்தின் மூலமாகவும் தொடர்புகளை ஏற்படுத்தமுடியும்.

பெயர்ப் பலகைகள், பொதுப் பாவனை படிவங்கள் ஆகியவை மும்மொழிகளில் இல்லாதவிடத்து, மொழி பாவனையில் எழுத்து இலக்கணப் பிழைகள் இருக்குமிடத்து அவற்றைப் படம் பிடித்து எமக்கு அனுப்பி வைக்கலாம். இவற்றை அனுப்பும்போது அந்த மொழிச்சட்ட மீறல் நிகழ்ந்துள்ள இடம், அலுவலகம், காலம் என்பவை பற்றியும் எமக்கு அறியத்தர வேண்டும்.

சமூக ஊடகங்களின் பாவனை இருபத்து நான்கு மணித்தியாலமும் அமுலில் இருக்கும். இதற்கு மேலதிகமாக வழமையான 1956 என்ற இலகு அழைப்பு இலக்கமும் பாவனையில் உள்ளது. இதன்மூலம் அலுவலக நேரங்களில் நேரடியாக அழைப்புகளை ஏற்படுத்தி அழைப்பு நிலைய அலுவலகர்களுடன் உரையாடி தகவல்களை தெரிவிக்கலாம் அல்லது பெற்றுக்கொள்ளமுடியும்.

எல்லாப் புகார்களும், வரிசைப்படுத்தப்பட்டு உரிய மேல் நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும். அவற்றை அமைச்சின் மொழி உரிமை பிரிவும், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவும் கண்காணித்து வழிநடத்தி அமைச்சருக்கு அறிக்கையை சமர்ப்பிக்கும்’ என் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top