1150 x 80 px
பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடு கிடையாது: மகிந்த அமரவீர

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முரண்பாடுகள் எதுவும் கிடையாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மீன்பிடித்துறை அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

தேசிய அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.

அடுத்து வரும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக, தற்பொழுது காணப்படும் குறைகள் நிவர்த்தி செய்து கொள்ளப்பட்டு வலுவான வகையில் தேசிய அரசாங்கம் முன்நோக்கி நகரும்.

சுதந்திரக் கட்சி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்காத போதிலும், அரசாங்கத்தை விட்டு விலகுவதாக தீர்மானிக்கவில்லை.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்தால் அதற்கு ஜனாதிபதியோ கட்சியோ ஒன்றும் செய்ய முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் நீடிக்க வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பான்மையான நிலைப்பாடாக அமைந்துள்ளது.

விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top