1150 x 80 px
அடுத்த இரண்டு தினங்களில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்கிறார் அமைச்சர் ராஜித்த

அடுத்த இரண்டு தினங்களில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது அமைச்சரவை மாற்றம் அல்ல எனவும், புதிய அமைச்சரவையாக அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

புதிய அமைச்சரவை பதவியேற்றாலும் பல அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது.

அமைச்சரவையில் இருந்து சிலரை நீக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கூறினார். இவர்களை நீக்கிய பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்கும்.

பிரதமருக்கு எதிராக செயற்பட்ட எவருக்கும் அமைச்சரவையில் இருக்க முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறும் எனவும் இதன் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top