1150 x 80 px
பொதுநலவாய விளையாட்டு குத்துச்சண்டை கோதாவில் இலங்கைக்கு முதல் பதக்கம்

21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

மகளிருக்கான குத்துச்சண்டை கோதாவில் 45 – 48 கிலோ எடைக்குட்பட்ட பிரிவில் அனுஷா கொடிதுவக்குடன் அரையிறுதியில் போட்டியிட்ட இந்தியாவின் மேரி கோம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதேவேளை இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்த அனுஷா கொடிதுவக்கு வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் 1950 ஆம் ஆண்டுக்கு பின்னர் குத்துச்சண்டை கோதாவில் இலங்கை பதக்கம் ஒன்றை பெற்றுள்ளது.

இதேவேளை 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை ஒரு வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக 4 பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

commanwealth 20

commanwealth 21

commanwealth 22

commanwealth 23

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top