1150 x 80 px
தூய்மையான நிர்வாகத்தை ஏற்படுத்தும் போது வினைத்திறன் பாதிக்கின்றது: அமைச்சர் சம்பிக்க ரணவக்க

நல்லாட்சி செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை ஒரே நேரத்தில் செய்யும் போது பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

செத்சிறிபாலவில் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கட்டடங்களை நிர்மாணிப்பது பற்றி பேசும் போது கட்டடங்களை உடனடியாக கட்டிவிடலாம் என சிலர் நினைக்கின்றனர்.

எனினும் நாட்டில் நல்லாட்சி செயற்பாடுகளுடன் அபிவிருத்திகளை முன்னெடுக்கும் போது பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடுகிறது.

காணிகளை பெற்றுக்கொள்ளவும் தேவையான கேள்வி மனு நடைமுறைகளை மேற்கொள்ளவும் அமைச்சரவையின் அனுமதியை பெறவும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளவும் நீண்டகாலம் செலவாகிறது. இது மிகவும் கவலைக்குரிய நிலைமை.

நாங்கள் நல்லாட்சியுடன் தூய்மையான நிர்வாகம் மற்றும் வினைத்திறன்மிக்க நிர்வாகத்தை எதிர்பார்த்தோம். தூய்மையான நிர்வாகத்தை ஏற்படுத்தும் வினைத்திறனுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top