1150 x 80 px
சோமாலியாவின் கால்பந்து மைதானத்தில் தாக்குதல்: 5 இரசிகர்கள் பலி

சோமாலியாவில் உள்ள காற்பந்து மைதானம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சோமாலியா நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பராவே நகரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்திலேயே நேற்று (வியாழக்கிழமை) அல் ஷபாப் பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் மைதானத்தில் இருந்த இரசிகர்கள் 5 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அல் ஷபாப் எனும் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆட்சியை எதிர்த்து அல் ஷபாப் தீவிரவாதிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இங்கு பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலநாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் கென்யா, ஜிபோட்டி, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த ஆப்பிரிக்க யூனியனைச் சேர்ந்த கூட்டுப்படையினரைக் குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அத்துடன், வெளிநாட்டினர் அதிகமாக கூடும் பிரபல விடுதிகள் மீது தாக்குதல் நடத்தி, பலரைச் சுட்டுக் கொன்றும், சிலரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தும் குழப்பநிலைகளைத் தோற்றுவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top