1150 x 80 px
நண்பர்களுடன் இருந்த போது கடலில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர்

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லங்காப்பட்டுண கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் சேருநுவர பகுதியைச் சேர்ந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் குறித்த நபர் லங்காப்பட்டுண கடலுக்குச் சென்று உறவினர்கள், நண்பர்களுடன் நீராடி பொழுதை போக்கிக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இவர் கடலில் நீராடும் போது அதிக மது போதையில் காணப்பட்டதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

லங்காப்பட்டுண கடற்படையினர் சடலத்தை மீட்டு சேருநுவர பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியசாலைக்கு இன்று காலை சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கு சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறும் சேருநுவர பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top