1150 x 80 px
இலங்கையில் பிரித்தானியாவின் முதலீடுகள்

பிரித்தானியாவின் முதலீடுகளை கொண்டு இலங்கையின் மின் உற்பத்தி துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக விசேட கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க செயலாளர் லியாம் ஃபொக்ஸை, நேற்று (புதன்கிழமை) லண்டனில் சந்தித்து உரையாற்றிய பின்னர் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தினால் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவரும் உதவிகளுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

மேலும், சகல நாடுகளுடனும் நட்புறவினை கட்டியெழுப்பிய வண்ணம் இலங்கை அரசாங்கம் பின்பற்றிவரும் வெளிநாட்டு கொள்கைகளின் ஊடாகவே நாட்டிற்கு பல வெற்றிகள் கிட்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன்மூலமே இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளிலும், சுற்றுலாத்துறையில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top