1150 x 80 px
கூட்டமைப்பின் சதி வலையில் சிக்காது தப்பும் சிவி!

தனக்கு தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்ல விருப்பம் இல்லை எனவும் வேறு கட்சியிலாவது மாகாண சபைக்கு போட்டியிட்டு மக்களுக்கு சேவை செய்ய எதிர்பார்த்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனை தேசிய பட்டியலில் பாராளுமன்றுக்கு அனுப்பிவிட்டு வேறு ஒருவரை வட மாகாண முதலமைச்சராக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. எனினும் விக்னேஸ்வரன் அதனை முழுமையாக நிராகரித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் காணப்படும் முறுகல் நிலையால் விக்னேஸ்வரன் அடுத்த தேர்தலில் வேறு அணியில் போட்டியிட எதிர்பார்த்துள்ளார். வட மாகாண முதலமைச்சருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் பலத்த ஆதரவு வழங்கி வருகின்றனர். எனவே அடுத்த தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் சவாலாகவே அமையும்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top